சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்த விவரங்கள்..
மெட்ரோ ரயில் சேவையைப் பொறுத்தவரை தற்போது ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு செல்ல குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 70 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நேரு பூங்காவிலிருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும். இந்த 23 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் கடந்துவிட முடியும். இதற்கான கட்டணம் 70 ரூபாய் ஆகும். மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டி பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு அதற்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 மணி நேரம் ரயில் நிலையத்தில் காரை நிறுத்தி வைக்க 10 ரூபாய் கட்டணமும், இரு சக்கர வாகனத்திற்கு 5 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும். 6 மணி நேரம் ரயில் நிலையத்தில் காரை நிறுத்தி வைக்க 20 ரூபாயும், இரு சக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
12 மணி நேரம் வரை ரயில் நிலையத்தில் காரை நிறுத்தி வைக்க 30 ரூபாயும், இரு சக்கர வாகனத்திற்கு 15 ரூபாயும் வசூலிக்கப்படும். 12 மணி நேரத்திற்கு மேல் ரயில் நிலையத்தில் காரை நிறுத்தி வைக்க 40 ரூபாயும், இரு சக்கர வாகனத்திற்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படும். 6 சக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரம் வரை 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.