தமிழ்நாடு

கோயில்களில் கணினி மூலமே கட்டண சீட்டு விநியோகம்

கோயில்களில் கணினி மூலமே கட்டண சீட்டு விநியோகம்

கலிலுல்லா

நவம்பர் 1-ம் தேதி முதல் கோயில்களில் அனைத்து கட்டண சீட்டுகளையும் கணினி வழியில் மட்டுமே வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. கணினி வாயிலாக கட்டண சீட்டுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அனைத்து கோயில்களிலும், NIC நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வழங்கப்படும் கட்டண சேவைகளை இணையதளத்தில் பதிவிட்டு அதற்காக அனுமதிக்கப்பட்ட கட்டணத்தையும் குறிப்பிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.