சிறப்பு பிளாஸ்மா வங்கி மக்களுக்கு அர்ப்பணிக்க பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. இரண்டு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பிளாஸ்மா வங்கியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே இரண்டாவதாக பிளாஸ்மா வங்கி சென்னையில்தான் தொடங்கப்பட்டுள்ளது.
பிளாஸ்மா வங்கி மூலம் ஒரே நேரத்தில் 7 பேரிடமிருந்து பிளாஸ்மா செல்கள் பிரித்து எடுக்க முடியும். ஒருவருக்கு பிளாஸ்மா செல்கள் எடுக்க 40 நிமிடம் வரை நேரம் எடுக்கும். இன்று மூவர் பிளாஸ்மா செல்களை தானம் வழங்கினர். பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் முதலாவதாக பிளாஸ்மா தானம் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் "சிறப்பு பிளாஸ்மா வங்கி மக்களுக்கு அர்ப்பணிக்க பட்டுள்ளது. தானம் செய்வது சிறந்த மாநிலம் தமிழ்நாடு. எனவே அனைவரும் பிளாஸ்மா கொடுக்க முன்வரவேண்டும். சென்னையை தவிர மதுரை, கோவை, சேலம், நெல்லை பிளாஸ்மா வங்கி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்மா வங்கி மூலம் ஒரே நேரத்தில் 7 பேரிடமிருந்து பிளாஸ்மா செல்கள் பிரித்து எடுக்க முடியும். ஒருவருக்கு பிளாஸ்மா செல்கள் எடுக்க 40 நிமிடம் வரை நேரம் எடுக்கும். இன்று மூவர் பிளாஸ்மா செல்களை தானம் வழங்கினர்" என்றார் அவர்