ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரத்தில் மழை வெள்ளம் கடல் போல சூழ்ந்துள்ளநிலையில், 3 ரயில்கள் விழுப்புரத்திலேயே நிறுத்தப்பட்டன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
விக்ரவாண்டி மற்றும் முந்தியம்பாக்கம் இடையே பாலம் எண் 452ல் வெள்ளம் ஏற்பட்டிருப்பதால், விழுப்புரத்திலேயே 3 ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சில ரயில்களின் வழித்தடமும் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை எக்மோர் – நாகர்கோவிலுக்கு இன்று 5 மணிக்கு செல்ல இருந்த, வண்டி எண் 20627 என்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எக்மோர் - மதுரைக்கு இன்று 6 மணிக்கு செல்ல இருந்த ரயில் எண் 22671 என்ற வந்தே தெஜஸ் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எக்மோர் - புதுச்சேரி (Puducherry MEMU) இன்று 6.35 க்கு செல்ல இருந்த வண்டி எண் 06025 ரத்து செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் - சென்னை எக்மோர் செல்லும் வண்டி எண் 16866 என்ற உழவன் எக்ஸ்பிரஸ் நேற்றைய தினம (01.12.2024) 21:55 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டது. இந்நிலையில் , கனமழை காரணமாக, விழுப்புரம், காட்பாடி, வழியாக மாற்றப்பட்டு சென்னை எக்மோரை வந்தடைகிறது
மன்னார்குடி - சென்னை எக்மோர் செல்லும் வண்டி எண் 1618 நேற்றைய தினம் 22:35 மணிக்கு மங்களூரு இருந்து புறப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம், காட்பாடி,வழியாக மாற்றப்பட்டு சென்னை எக்மோரை வந்தடைகிறது.
கரைகால் – தாம்பரம் செல்லும் வண்டி எண் 16176 நேற்றைய தினம் 21:20 மணிக்கு கரைக்காலிருந்து புறப்பட்டது, இந்நிலையில், விழுப்புரம், காட்பாடி வழியாக மாற்றப்பட்டு சென்னை எக்மோரை வந்தடைகிறது.
செங்கோட்டை - தாம்பரம் செல்லவிருந்த வண்டி எண் 20682 என்ற சிலம்பு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்றைய தினம் 16:50 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம், காட்பாடி வழியாக சென்று சென்னை எக்ஸ்மோரை வந்தடைகிறது.