தமிழ்நாடு

புதுச்சேரியிலிருந்து மதுரைக்கு மூன்றேகால் மணிநேரத்தில் 375 கி.மீ பயணித்த கல்லீரல்

புதுச்சேரியிலிருந்து மதுரைக்கு மூன்றேகால் மணிநேரத்தில் 375 கி.மீ பயணித்த கல்லீரல்

webteam

புதுச்சேரியில் மூளைச்சாவு அடைந்த சிறுவனிடம் தானமாகப் பெறப்பட்ட கல்லீரல், சாலை வழியாக 375 கிலோ மீட்டர் தூரத்தைக் மூன்றேகால் மணி நேரத்தில் மதுரை கொண்டு செல்லப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விபத்து ஒன்றில், 8 வயது சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இவரிடம் தானமாக பெறப்பட்ட கல்லீரல், மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில், கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 58 வயதான முதியவருக்கு பொருத்துவதற்காக, ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. புதுச்சேரியிலிருந்து, மதுரைக்கு இடையேயான 375 கிலோ மீட்டர் தூரத்தை, மூன்றேகால் மணிநேரத்தில் ஆம்புலன்ஸ் கடந்தது. இதனைத் தொடர்ந்து, மதுரையில் தயாராக இருந்த 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினர், சிறுவனிடம் தானமாக பெறப்பட்ட கல்லீரலை, சிகிச்சையில் இருந்த 58 வயதான நபருக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.