தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்கச் சென்ற தந்தை மகன் உட்பட 3 பேருக்கு நேர்ந்த விபரீதம்

செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்கச் சென்ற தந்தை மகன் உட்பட 3 பேருக்கு நேர்ந்த விபரீதம்

kaleelrahman

செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப் பார்க்க சென்ற தந்தை, மகன், மகள் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை குன்றத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உஸ்மான். இவர் இன்று மதியம் தனது மகள் அர்ச்சனா மற்றும் மகன் சுசிலுடன் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அப்போது செம்பரம்பாக்கம் ஏரியின் சைனா கோபுரம் அமைந்துள்ள பகுதி அருகே மூவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.


அப்போது எதிர்பாராதவிதமாக உஸ்மானின் இரண்டு பிள்ளைகளும் ஏரியில் தவறி விழுந்துள்ளனர். இதை அடுத்து உஸ்மான் இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார். ஏரியில் குதித்த உஸ்மான் தத்தளித்துக் கொண்டிருந்ததை கண்டு அருகே இருந்தவர்கள் காப்பாற்ற சென்றுள்ளனர் . உஸ்மானை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.


ஆனால் தண்ணீரில் மூழ்கிய அர்ச்சனா, சுசில் ஆகிய இருவரை தேடியும் கிடைக்கவில்லை. இதை அடுத்து அருகே உள்ள குன்றத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தண்ணீரில் மூழ்கிய இருவரது உடலையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது