நாமக்கல் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு, சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அடுத்த எர்ணாபுரம் காட்டு கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சின்னத்தம்பி. இவர் தனது மண் சுவர் வீட்டை, பராமரிப்பு பணிக்காக சுவற்றை கடப்பாறையால் இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இதனை அருகில் வசித்து வந்த 55 வயது பூங்கொடியும், அவரது 2 வயது பேத்தி தேவஸ்ரீயும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண்சுவர் பூங்கொடி மற்றும் தேவஸ்ரீ மீது விழுந்ததில் அவர்கள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதில் படுகாயமடைந்த சின்னத்தம்பியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.