death pt desk
தமிழ்நாடு

மேல்மருவத்தூர்: சாலை விபத்தில் 4 வயது பேத்தியுடன் தாத்தா பாட்டியும் பலியான சோகம்!

மேல்மருவத்தூர் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிய மூன்று பேர் அடங்கிய ஒரு குடும்பம், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளனர்

webteam

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள காட்டுக்கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தனது மனைவி ராணி மற்றும் பேத்தி அக்ஷயாவை (4) அழைத்துக்கொண்டு உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக நேற்று ஆலப்பாக்கம் கிராமத்திற்கு சென்றுள்ளார். பின் நேற்றிரவு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். மேல்மருவத்தூர் - வந்தவாசி சாலையில், செண்டிவாக்கம் அருகே இவர்கள் வந்தபோது இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

police station

இதில், மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற மேல்மருவத்தூர் காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாத்தா, பாட்டி மற்றும் 4 வயது பேத்தியின் இந்த இறப்பு, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.