தினகரன் ஆதரவு எம் எல் ஏ, மாரியப்பன் கென்னடிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மாரியப்பன் கென்னடியின் சட்டமன்ற அலுவலகத்திற்கு சென்னையிலிருந்து பதிவுத் தபால் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக மானாதுரை நகர காவல்நிலையத்தில் கென்னடியின் உதவியாளர் விஜயகுமார் புகார் அளித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்