தமிழ்நாடு

1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு: கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு

webteam

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சுடுமண்ணால் ஆன உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சுமார் ஒருமீட்டர் அகலமும் 15 அடி ஆழத்துடனும் அந்த உறைகிணறு காணப்பட்டது. இதனையறிந்த அங்கு சென்ற அதிகாரிகள், வரலாற்று பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர். 

ஆய்வுக்கு பின் பேசிய அதிகாரிகள், அந்த கிணறு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக பொதுமக்கள் பயன்படுத்தியது. இது சுடுமண்ணால் ஆன உறை கிணறு என்றும் இந்த கிணற்றில் இருப்பது சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகளைகொண்டது என கூறினார். உறைகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் கொண்டது என தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய அனுமதி அளித்தால்ஆய்வு நடத்து முடியும் என தெரிவித்தனர். இந்த கிணற்றை பொதுமக்கள் பலரும் பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இது போன்ற வரலாற்று புகழ் பெற்ற பல அரிய பொருட்கள் இருக்கின்றது. இதனை பாதுகாக்கும் விதமாக இங்கு அகழ் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.