தமிழ்நாடு

ஈழத்தமிழர்களின் அழிவுக்கு காரணமான கை சின்னத்தில் வாக்களிப்பவர்கள் இன துரோகிகள் - சீமான்

webteam

எடப்பாடி பழனிசாமி மீதான 5 ஆயிரம் கோடி ஒப்பந்த ஊழல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட காரணம் வசூல் என சீமான் குற்றம் சாட்டினார்.

ஈரோடு கிழக்குஇடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஈழத் தமிழர்களின் அழிவுக்கு காரணமான கை சின்னத்திற்கு வாக்களிப்பவர்கள் இன துரோகிகள். அதிமுக திமுக எதிரிகள் போல நடிக்கின்றனர், எடப்பாடி பழனிசாமி மீதான 5000 கோடி ஒப்பந்த ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதையடுத்து அவரகள் இது குறுத்து பேச தடை விதிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது மத்திய புலனாய்வு விசாரணைக்குச் சென்று சிபிஐ விசாரணை செய்து உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வழக்கை திரும்ப உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு வசூல் தான் காரணம். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருபக்கம் ரெய்டு மறுபக்கம் சைடில் பணம் செல்கிறது.

தொடர்ச்சியாக அடக்குமுறை ஒடுக்கு முறையை எதிர்கொண்டு நிற்கிறோம். குக்கர், பட்டுப்புடவை, லட்சுமி, வெங்கடாசலபதி அதன் பின்னர் ஸ்டாலின் உதயநிதி அண்ணா கருணாநிதி படம் இடம்பெறும் வகையில் மக்களுக்கு விநியோகம் நடக்கிறது இதான் பகுத்தறிவா. 350 ரூபாய் கொடுத்து கொலுசு வாங்க முடியாத மக்களாய் நம் மக்களை ஆக்கிவிட்டார்கள். காலில் போட்டு கடத்தெரு வரை நடந்தாலே அது கருத்துப் போகும். 60 ஆண்டுகளாக ஒரே பொய்யைச் சொன்னா யார் கேட்பாரக்ள்.

தேர்தல் ஆணையம் இதுவரை உறுப்படியா எதுவும் செய்யல வாக்குப்பதிவின் போது மறைப்பை சரியாக வையுங்கள் பணம் கொடுத்தவர்கள் உட்கார்ந்திருப்பாரக்ள். இந்த இடைத்தேர்தலில் ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு பாட்டு எங்கேயாவது கேட்குதா? அந்த பாட்ட இப்ப போடுங்க. ஒரு ஓட்டு கூட கிடைக்காது. திமுக அதிமுகவிற்கு என்ன வேறுபாடுகள் பார்த்திருக்கிறீர்கள் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் கொடுத்தார்களா கொடநாடு வழக்கை விசாரித்து ஓராண்டில் நடவடிக்கை என்றார்கள் ஏன் நடக்கவில்லை. இரண்டு கட்சிகளும் வௌ;வேறு கட்சி போல் நடிப்பார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுடச் சொன்னது யார்? எடுத்த நடவடிக்கை என்ன? கொடநாடு கொலை வழக்கில் என்ன நீதி கிடைத்தது. ராணுவ வீரர் கொலை செய்யப்படுகிறார் என்றால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு திமுக கட்சியா? கார்ப்ரேட் கம்பெனியா? இது பொலிட்டிக்கல் பார்ட்டி அல்ல கருணாநிதியின் பேம்லி பார்ட்டி என்று பேசினார்.