மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது” என தெரிவித்திருக்கிறார்.