கபடி போட்டிக்கு அழைத்துச் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கபடி போட்டிக்காக மாணவியை விருதுநகர் மாவட்டத்துக்கு அழைத்துச் சென்ற அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் விடுதியில் வைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தமிழ்ச்செல்வனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு நேர்நிறுத்தப்பட்ட தமிழ்ச்செல்வன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.