தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது துணை வட்டாச்சியர்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது துணை வட்டாச்சியர்கள்

webteam

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. போராட்டத்தின் போது
காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைப்பெற்றது. இதனையடுத்து போராட்டக்காரர்களை களைப்பதற்காக
காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 10க்கும்  மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்கட்சியினர் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் அனைவரும் தலை மார்பு ஆகிய பகுதியில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர்.


காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்திய வீடியோ காட்சிகள் வெளியானது. இதில் காவல்துறையினர் ஸ்நைப்பர் ரக துப்பாக்கிகளை கொண்டு
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். குறி தவறாமல் சுடக்கூடிய ஸ்நைப்பர் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன் என்ற கேள்விகளும்
எழுந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது வட்டாச்சியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக துணை
வாட்டாச்சியர்கள் இருவர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி இந்த தகவல்
தெரியவந்துள்ளது.


இந்த முதல் தகவல் அறிக்கை புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அதில் தூத்துக்குடி வட்டாசியர் அலுவலகத்தை சேர்ந்த துணை வட்டாச்சியர்
(தேர்தல்) சேகர் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்  மே 22ஆம் தேதி காலை 11 மணியளவில் சுமார் 10 ஆயிரம் பேர்
காவல்துறையின் தடுப்புகளை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாக தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல்
துணை வட்டாட்சியர் கண்ணனும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.