தமிழ்நாடு

தூத்துக்குடி: நிலப்பிரச்னையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி எடுத்த விபரீத முடிவு

தூத்துக்குடி: நிலப்பிரச்னையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

விளாத்திகுளம் அருகே நிலப்பிரச்னையில் தீர்வு கிடைக்காததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் சதுரகிரி (59). விசாயியான இவரது விவசாய நிலம் அருகே தனியார் பட்டாசு ஆலையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த தனியார் பட்டாசு நிறுவனம் தனது நிலத்திற்கு செல்லும் பாதையை மறித்ததோடு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், நிலத்தை அளவீடு செய்ய அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து விவசாயி சதுரகிரி, நிலத்தை அளவீடு செய்ய வருவாய் துறையினரிடம் மனு அளித்துள்ளார். ஆனால், நிலத்தை அளவீடு செய்ய காலதாமம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் தனியார் பட்டாசு ஆலை நிர்வாகம் நீதிமன்றம் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சதுரகிரி தனது விவசாய நிலத்திலேயே கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அவர் எழுதிய கடிதத்தை கைப்பாற்றிய உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்ப முயன்றனர். ஆனால் விவசாயியின் உடலை எடுக்க விடமால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.