தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் சிவகளை அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்டார் கனிமொழி எம்.பி

Veeramani

ஆதிச்சநல்லூர் அருகேயுள்ள சிவகளையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை திமுக மகளிரணிச் செயலாளர் பார்வையிட்டார்.

இது தொடர்பாக ட்வீட் செய்திருக்கும் கனிமொழி எம்.பி, “இன்று சிவகளையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்டோம். இங்குள்ள ஒரு பெரிய தாழியின் உள்ளிருந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அது பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு சிறிய பானையை வெளியில் எடுத்தபொழுது, புதிதாய் பிறந்த ஒரு குழந்தையை பார்ப்பது போல் உணர்ந்தேன். இந்த இடம் ஆதிச்சநல்லூரை விடவும் பழமையாக இருக்ககூடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

கதிரியக்க கரிம ஆய்வு முடிவுகள் இந்த கூற்றை உறுதிப்படுத்தும். தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள இனத்தின் வழிதோன்றல் நாம் என்ற பெருமையும் அந்த பெருமையை காப்பாற்ற வேண்டிய கடமையும் நம் எல்லோருக்கும் உண்டு. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் .செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்” என தெரிவித்திருக்கிறார்