தமிழ்நாடு

நக்கீரன் கோபால் கைது அதிகார வரம்பு மீறல்: தொல்.திருமாவளவன்

நக்கீரன் கோபால் கைது அதிகார வரம்பு மீறல்: தொல்.திருமாவளவன்

webteam

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான அதிகார வரம்பு மீறல் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ’தமிழக ஆளுநர் அலுவலகம் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையி ல் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி குறித்து செய்தி வெளியிட்டதற்காக ஆளுநர் அலுவலகத்தில் இருந்து நக்கீரன் கோபால் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இது அப்பட்டமான அதிகார வரம்பு மீறல்.

ஆளுநர் அலுவலகத் திலிருந்து பத்திரிகையாளர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்படுவது இந்தியாவில் வேறெங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டிருப்பது வேதனைக் குரியது.

பல்கலைகழகத் துணைவேந்தர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் கூறியிருந்தார். துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட ஆளுநரே அப்படி சொன்னது எல்லோருக்கும் வியப்பளித்தது. அதுகுறித்த விவரங் களை வெளியிட வேண்டுமென்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதை திசை திருப்புவதற்காகவே இப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது. நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.