தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கான காரணத்தை சொன்ன உதயநிதி ஸ்டாலின்

sharpana

"உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு கிடத்த 99% வெற்றிக்கு முதல்வர்தான் காரணம்" என்று வேலை வாய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் உள்ள ஜி.கே.உலகப்பள்ளி வளாகத்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட பல முன்னணி நிறுவங்கள் பங்கேற்ன. இந்த முகாமில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரே நேரத்தில் 12,500 பட்டதாரிகள் நேர்முகத்தேர்வுக்கு வந்த நிலையில், 2000-த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

அப்போது பேசிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழகத்தில் தொழில்துறையை மேம்படுத்த 2500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஒரு ஆண்டும் ரூ 200 கோடி ஒதுக்கப்பட்டு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்து பேசிய உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரத்திற்கு சென்றபோது மிகுந்த எழுச்சி காணப்பட்டதாகவும், அதன் காரணமாக திமுக 99% வெற்றி பெற்றதாவும் இதற்கு முக்கிய காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் எனக் கூறினார்.