தமிழ்நாடு

”இந்த அரசின் கடைசி பட்ஜெட் இதுதான்” - ஸ்டாலின் பேட்டி

”இந்த அரசின் கடைசி பட்ஜெட் இதுதான்” - ஸ்டாலின் பேட்டி

webteam

இந்த அரசின் கடைசி பட்ஜெட் இதுதான் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் , “ ஆளுநர் பேசுவதற்கு முன்னர் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவர் என்னை அனுமதிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், தமிழகம் பலம் பெற்றுள்ளது என்றார். அதிமுக அரசு மீது கொடுத்த ஊழல் புகார்களை ஆளுநர் இதுவரை விசாரிக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர்தான் இந்த அரசின் கடைசி பட்ஜெட்" என்றார்

மத்திய பட்ஜெட்டை லாலி பாப் என்று விமர்சனம் செய்ததிற்கு விளக்கம் அளித்த ஸ்டாலின், “ 2015 பட்ஜெட் வெளியானபோது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டுதான் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது, 2021 இதுவரை அந்தப் பகுதியில் ஒரு செங்கலை கூட நடவில்லை அதன் அடிப்படையிலே நான் அவ்வாறு விமர்சனம் செய்தேன்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “ இந்த பட்ஜெட்டில் கேஸ், பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ஆகையால் சாமானிய மக்களுக்கான பட்ஜெட் இல்லை. கார்ப்ரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட். சட்டப்பேரவை கூட்டத்தொடரையும் முழுவதுமாக புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம்.  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்காமல் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடம் இல்லை. உண்மையான தகவல்களை அளிப்பதில்லை.” என்றார்.