தமிழ்நாடு

இது விஜயின் அரசியல் கட்சி அல்ல.. என்னுடைய முயற்சிதான் : எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

இது விஜயின் அரசியல் கட்சி அல்ல.. என்னுடைய முயற்சிதான் : எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

Veeramani

அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன் என்று நடிகர் விஜயின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

விஜயின் அரசியல் கட்சி தொடர்பாக பேசியுள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் “ இது என்னுடைய முயற்சிதான். இது விஜயின் அரசியல் கட்சி அல்ல.  அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன். அவர் கட்சி அரசியலில் நுழைகிறாரா என்பது குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை பதிவு செய்ய, தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என அந்த பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் இதற்கு விளக்கமளித்துள்ளார் .