தமிழ்நாடு

திருவாரூர்: தடையைமீறி வாகனங்கள் நிறுத்தம்–இடிந்துவிடும் அபாயத்தில் கமலாலய குளத்தின் சுவர்

திருவாரூர்: தடையைமீறி வாகனங்கள் நிறுத்தம்–இடிந்துவிடும் அபாயத்தில் கமலாலய குளத்தின் சுவர்

Veeramani

திருவாரூர் மாவட்டத்தில் கமலாலயக் குளத்தில் தடையை மீறி நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்களால் கமலாலய குளத்தில் தென்கரை சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தியாகராஜர் கோவிலில் கமலாலய குளத்தில் தென்கரை சுவர் சுமார் 100 அடி இடிந்து விழுந்தது. அதன் அருகில் சுமார் 300 அடி நீளத்திற்கு அமைந்துள்ள சுற்றுச் சுவரில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து  விழ கூடிய சூழலில் உள்ளது

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அந்த சாலை முழுவதும் தடை செய்து எந்த வாகனமும் எந்த பொதுமக்களும் செல்லாத அளவிற்கு தடுப்புகளை வைத்து தடுத்து இருந்தது. ஆனால், இன்று சுவர் இடிந்து விழுந்த இடம் தவிர்த்து சுற்றுச்சுவர் 300 அடி நீளத்தில்  பாதிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் தடை செய்யப்பட்ட தென்கரையில் வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி பழமை வாய்ந்த தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் சுற்றுச்சுவரை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார்கள்.