சடலமாக மீட்கப்பட்ட விவசாயி pt desk
தமிழ்நாடு

திருவாரூர் | குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விவசாயி - பல கோணங்களில் போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே குளத்தில் சடலமாக கிடந்த விவசாயி. சுடலத்தை கைப்பற்றி போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: மாதவன்

திருவாரூர் தாலுகா காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவூர் கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (56). இவர், இந்த பகுதியில் விவசாய வேலை செய்து வந்துள்ளார் இந்த நிலையில், இவரது வீட்டின் அருகே உள்ள சிவன் கோயில் குளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இறந்தவரது மனைவி கார்த்திகை செல்வி அளித்த புகாரின் பேரில் போலீசார், மதிவாணன் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்தவர் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது .