தமிழ்நாடு

திருவாரூர்: பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவாரூர்: பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Sinekadhara

திருவாரூர் மாவட்டத்தில் பயன்படுத்த முடியாத பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தொடர்புடைய பழுதடைந்த கட்டடங்களை பொதுப்பணித் துறை இடித்து வருகிறது. தொடர்ந்து, தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி தொடர்புடைய பழுதடைந்த கட்டடங்களை திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இடித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமாக 1,282 பள்ளிகள் உள்ளன. இதில் அரசு பள்ளிகள் 1,026. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பழுதடைந்த, பயன்படுத்த முடியாத பள்ளி கட்டிடங்கள் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த ஐந்து கட்டடங்களும் தற்போது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டு வருகிறது. முதலில் அந்த கட்டடங்களில் உள்ள பயன்படுத்தக்கூடிய மேஜைகள், நாற்காலிகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு அந்தக் கட்டடங்கள் நவீன இயந்திரங்கள் மூலம் இடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.