திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருப்பது மத்திய, மாநில அரசுகளின் சதி என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய சாகுல் அமீது, “இது முழுக்க முழுக்க மக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்குகின்றது. இது திட்டமிட்ட மத்திய, மாநில அரசுகளின் சதி. மத்திய அரசின் விருப்பும் என்னவென்றால் இந்த தேர்தலை ஒரு முன்னோட்டமாக பார்த்தனர். நாடாளுமன்ற தேர்தலில் அவர்களின் நிலையை அறிந்துகொள்ளும் ஒரு பரிசோதனையாக இந்த தேர்தலை கருதினர்” என தெரிவித்தார்.
இதற்கு முன்னர், திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் தேர்தல் பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்னர், திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததும், இதனால் திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.