தமிழ்நாடு

திருவாரூர்: வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு

திருவாரூர்: வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு

kaleelrahman

திருவாரூர் அருகே வயல் வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ஆதனூர் பகுதியில் வயலில் மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் பெண் ஒருவர் மின் கம்பியை மிதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நீடாமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாபநாசம் தாலுகா தென்கோண்டார் இருப்பைச் சேர்ந்த ராஜப்பன் என்பவரது மனைவி சாரதாம்பாள் (58) என்பது தெரியவந்தது. இவர், கால் கழுவ வயலில் இறங்கிய போது அறுந்து கிடந்தது மின்கம்பியை தெரியாமல் மிதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சாரதாம்பாள் உடலை கைப்பற்றிய நீடாமங்கலம் போலீசார், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.