சேத்துப்பட்டு அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மஞ்சுளா, ரேணு, மற்றும் ஐந்து வயது சிறுவன் வள்ளிக்கண்ணன் ஆகிய 4 பேரும் மோட்டார் பைக்கில், உலகம் பட்டு கிராமத்திற்கு மரம் வெட்ட சென்றுள்ளனர்.
அப்போது பெரிய கொழப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலர் நந்திவர்மன் எதிரே மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் ராஜா மற்றும் நந்திவர்மன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இதே பகுதியில் நேற்று இரவு சுந்தர் என்ற இளைஞர் மோட்டார் பைக்கில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவத்திலேயே உயிரிழந்தார்.
இந்த இடத்தில் அடிக்கடி தொடர்ந்து விபத்து நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும், இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.