தமிழ்நாடு

திருவண்ணாமலை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் பரிதாபமாக உயிரிழப்பு

திருவண்ணாமலை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் பரிதாபமாக உயிரிழப்பு

kaleelrahman

சென்னை அப்போலோவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போளூரை சேர்ந்த மருத்துவர் ராமலிங்கம் - மணியம்மாள் தம்பதியினரின் மகள் கார்த்திகா (28). மருத்துவரான கார்த்திகாவின் கணவர் கார்த்தி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மருத்துவர் கார்த்திகாவிற்கு கடந்த வாரம் போளூரிலுள்ள வீட்டில் சீமந்த நிகழ்ச்சி நடந்து முடிந்து, இதையடுத்து கார்த்திகாவுக்கு எடுத்த கொரோனா டெஸ்ட்டில் பாஸிடிவ் என வந்ததையடுத்து திருவண்ணாமவை அரசு மருத்துவமனையில் கார்த்திகா சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.