திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற 14 வயது சிறுமியின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள வடகல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அவரது உறவினர் மூர்த்தி என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சிறுமி கருவுற்றுள்ளார். பின்னர் இந்த வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மகிழேந்தி, 14 வயது சிறுமி கருவுற்று இருப்பது அவரது உடல் நலத்திற்கு கேடு என்றும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் வளர்ச்சியடையாத பெண், கருவை சுமப்பது ஆபத்தானது என்று கூறி கருவை கலைக்க உத்தரவிட்டார்.