பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையில் மர்ம நபர்கள் சாணியை பூசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. இந்தச் சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சாணியை பூசிவிட்டு சென்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.