செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷிதா (24). இவர், பொன்னேரியில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, பொன்னேரி காவல் நிலையம் அருகே அவரது வாகனத்திற்குப் பின்னால் வந்த லாரி, அவர் மீது மோதியுள்ளது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த ஜோஷிதா, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த பொன்னேரி காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்த ஜோஷிதாவின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மணி என்பவரை கைது செய்த செங்குன்றம் போக்குவரத்து காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.