செய்தியாளர்: நரேஸ்
முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 3ஆம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானையுடன் தினமும் காலை மாலை என இரு வேளைகளில் வாகன சேவைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இந்நிலையில், 4ஆம் நாளான இன்று முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி வாகனத்தில் மாட வீதியைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் அப்போது ஏராளமான பக்தர்கள் அரோகரா அரோகரா என பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். இன்று 5ஆம் நாள் காலை அன்ன வாகனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் உலா வர உள்ளார்.
மேலும் விழாவின் முக்கிய விழாவாக இம்மாதம் பத்தாம் தேதி வள்ளி திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஏராளாமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பாாக்கப்படுகிறது.