ஹெச்.ராஜா pt desk
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்|மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு

இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் பேரில் இந்து முன்னணி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் மாலை 5 முதல் 6 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், சிக்கந்தர் குறித்தும், திருப்பரங்குன்றம் மலை யாருக்குச் சொந்தம் என்பது குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், மதம், இனம் அடிப்படையில் பேசி பிரச்னையை ஏற்படுத்த முயலுதல், பொது அமைதியை சீர்குலைக்க முயலுதல், தவறான தகவல் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.