திருப்பரங்குன்றம் pt web
தமிழ்நாடு

📢 Live updates : திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நடப்பது என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்த நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான உடனுக்குடனான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்த நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 6 முதல் 6.30 மணி வரை தீபம் ஏற்றும் நிகழ்வின்போது அப்பகுதிக்கு அங்கீகரிக்கப்பட்ட குழுவினரைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் செல்போன் கொண்டு செல்லவும், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ள நிலையில், வருவாய்த் துறை, காவல் துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான உடனுக்குடனான தகவல்களை இங்கு பார்க்கலாம்...

நயினார் நாகேந்திரன் கைது!

நெல்லையில் இருந்து வாகனத்தில் திருப்பரங்குன்றம் நோக்கி சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது.