திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பான போராட்டத்தில் தாங்கள் பங்கேற்கவில்லை என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம் என்றும், திருப்பரங்குன்றம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் தாங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதாக அங்கு வசிக்கும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் தெரிவிக்கின்றனர். வெளியிலிருந்து வந்தவர்களே தேவையற்ற பிரச்சனையை கிளப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து உள்ளூர் மக்கள் சிலர் கூறுகையில்,
“கந்தூரி விழாக்களுக்கு இந்துக்களும் நன்கொடை தருவோம். இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். இது ஒரு பிரச்சனையாகவே எங்களுக்கு தெரியவில்லை” என்கிறார் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அருணா...
”இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆடு,கோழி நேர்த்திக்கடன் கொடுப்பது ஆண்டாண்டு பழக்கம். ஒற்றுமையாக இருக்க அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த குர்ஷித்
மேலும் மக்கள் சிலர் இப்பிரச்சனைக்குறித்து தெரிவித்த கருத்துக்களை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.