thiruparankundram deepam issue  Pt web
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம்| ”அனுமதிக்க முடியாது” வாக்குவாதம் செய்த இந்துமுன்னணி அமைப்பினர்.. மறுத்த போலீசார்!

144 தடை உத்தரவையும் ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், மனுதாரர் தீபம் ஏற்ற உரிய பாதுகாப்பை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழங்கவும் உத்தரவிட்டார்.

PT WEB

நேற்று நடந்தது..

கார்த்திகை தீபத் திருநாளான நேற்று, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்து முண்ணனி அமைப்பினர் கூட்டமாக திருப்பரங்குன்றத்திற்கு தீபம் ஏற்ற வந்தபோது காவல்துறையினாரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். இதையடுத்து, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்து இந்து முண்ணனி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஏற்ப்பட்ட கலவரத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. மேலும், 144 தடை உத்தரவையும் காவல்துறை அமல்ப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, மத்திய படையுடன் மனுதாரர் வந்தபோதும் மேல்ல செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்

தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி

திருப்பரங்குன்றம், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. காலை முதல் இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தற்போது, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் விசாரிக்கலாம்..

தொடர்ந்து நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பில், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அளித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாத காரணத்தாலேயே மனுதாரரை தீபத்தூணில் தீபமேற்ற நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம், மாநில அரசு தனது கடமையை செய்ய தவறியதாலேயே சிஐஎஸ்எஃப் வீரர்களை நீதிபதி பாதுகாப்புக்கு அனுப்பியிருக்கிறார். எனவே, இந்தப் பிரச்சனையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு சரியானதே எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் மாநிலஅரசு இந்த மனுவை தொடர்ந்துள்ளது என்ற விமர்சனத்தையும் தமிழக அரசின் மீது நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

காவல் ஆணையர் உடனே ஆஜராக வேண்டும்

இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர் சீனிவாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்படாதது குறித்து மதுரை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனடியாக காணொளி வழியாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மதுரை காவல் ஆணையர் லோகநாதன் மட்டும் காணொளி வாயலாக ஆஜராகி விளக்கமளித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்றே, திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். மேலும், 144 தடை உத்தரவையும் ரத்து செய்த அவர், மனுதாரர் தீபம் ஏற்ற உரிய பாதுகாப்பை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழங்கவும் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றத்தில் குவிந்த பாஜவினர், இந்துத்துவ அமைப்பினர்!

இந்நிலையில், நீதிபதி உத்தரவையடுத்து திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் இந்துத்துவா அமைப்பினர் மற்றும் பாஜகவினர் குவிந்தனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டார் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மனுதாரர் ராம.ரவிக்குமாரும் போலீசாருடன் நீதிமன்ற உத்தரவின்படி மேல செல்ல அனுமதிக்குமாறு பேசினார்.

அனுமதிக்க முடியாது - காவல்துறையினர் திட்டவட்டம்

இருப்பினும் இந்துத்துவா அமைப்பினர் சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி அளிக்க முடியாது, அரசு மேல்முறையீடு செல்ல உள்ளது என காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

பின்னர், நாயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர். ஆனால், அந்த வேனை எடுத்துச் செல்ல விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த @mkstalin மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

”திடீர் பிரச்னையை உருவாக்குகிறார்கள்” - ரகுபதி

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்பொழுது, “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 2014 தீர்ப்பின்படி நாங்கள் நடந்துகொள்கிறோம். மதவாதிகள் எவ்வழியேனும் காலூன்ற எண்ணுகிறார்கள்; திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்னையை உருவாக்குகிறார்கள்” என்றார் அமைச்சர் ரகுபதி.

மேலும், “அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதையே பழனிசாமி மறந்துவிட்டார். திமுக அரசின் மீது குற்றச்சாட்டை சொல்வது மட்டும்தான் பழனிசாமியின் வேலை. பாஜகவுக்கு முழு அடிமை என்பதை உறுதி செய்திருக்கிறார் பழனிசாமி” என்றார்.