தமிழ்நாடு

மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெல்லை காவல்துறை

மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெல்லை காவல்துறை

webteam

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களை எளிதாக அணுகவும் நெல்லை மாநகர காவல்துறையினர் மீம்ஸை பயன்படுத்தி வருகின்றனர்

சமூக ஊடகங்களில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் கொண்ட மீம்ஸ் இல்லாவிட்டால், சமூக ஊடகங்களே களை இழந்துவிடும் என்று கூறிவிடலாம். நேசமணி அதற்கு ஒரு அண்மைக்கால உதாரணம். இப்படி மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்ற மீம்களை ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளது நெல்லை மாநகர காவல்துறை.

ட்விட்டர், வாட்ஸ் அப், பேஸ்புக், யூ ட்யூப், இன்ஸ்டகிராம் என அனைத்திலும் வலம் வரும் நெல்லை மாநகர காவல்துறை, தலைக்கவசம் அணிவதன் அவசியம், ஏடிஎம் பாஸ்வேர்டை பாதுகாப்பது, பெண்கள் பாதுகாப்பு, சிசிடிவியின் முக்கியத்துவம் போன்றவை குறித்து வடிவேலு மீம்ஸ்களை உருவாக்கி களமிறக்கியுள்ளது.

சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக விளங்கும் நெல்லை மாநகர காவல்துறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது