தமிழ்நாடு

தேர்தலை ரத்து செய்யக் கூடாது: திருநாவுக்கரசர்

தேர்தலை ரத்து செய்யக் கூடாது: திருநாவுக்கரசர்

webteam

பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளரை சந்தித்த அவர், வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. வருமானவரித் துறை சோதனையில் கிடைத்த விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்துகின்றன. பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்யக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.