தமிழ்நாடு

கருணாநிதி உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டது: திருநாவுக்கரசர்

கருணாநிதி உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டது: திருநாவுக்கரசர்

Rasus

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டதாகவும், தற்போது மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்றுவருகிறார். இதனையடுத்து குடியரசுத் தலைவர், பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக ஏற்கனவே மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காவேரி மருத்துவமனை சென்றார். பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டது. தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் என்று கூறினார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்ததாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.