Thirumavalavan
Thirumavalavan pt desk
தமிழ்நாடு

பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த வானதி... விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கொடுத்த பதிலடி!

webteam

தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியை விட்டு விலகி பாஜக கூட்டணியில் இணைய வேண்டுமென எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தொல்.திருமாவளவன், “மதவாத மற்றும் சாதிவாத சக்திகளான பாஜக மற்றும் பாமகவுடன் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்காது.

vanathi srinivasan

‘திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்திவிட முடியாதா’ என இலவு காத்த கிளி போல் காத்திருப்பதில் வானதி சீனிவாசனும் ஒருவர். சனாதன சக்திகளை வீழ்த்துவதற்காகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மதவாத சக்திகள் மற்றும் சாதியவாத சக்திகளான பாஜக மற்றும் பாமக உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஒரு போதும் கூட்டணி அமைக்காது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வெற்றி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தென்னிந்தியாவை தூய்மைப்படுத்தியது போல் நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதையும் தூய்மைப்படுத்தும்.
தொல்.திருமாவளவன்

காங்கிரஸ் கட்சி இந்துக்களின் விரோத கட்சி என பாஜகவினர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். கர்நாடக தேர்தலில் 35 சதவீத இந்துக்கள், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

Bjp-Congress

காங்கிரஸ் கட்சியை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைத்த கர்நாடக மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என பேட்டியளித்திருக்கிறார்.