சிங்கள இன வெறியர்களின் காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாகக் கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த அவர், மோடி ஆட்சி வந்தால் மீனவர்களுக்குப் பாதுகாப்பளிப்பார் என எண்ணத்தை இங்கு உருவாக்கினார்கள், ஆனால் இந்தியா, இலங்கை நாடுகளில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபோதிலும், தமிழக மீனவர்களுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுவதாகத் தெரிவித்தார்.
மேலும் இருநாட்டு மீனவர்களையயும் அழைத்து மத்திய அரசு, மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது, பேச்சுவார்த்தையில் இரு நாட்டு அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் இனிமேல் துப்பாக்கிச் சூடு நடக்காது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். ஆனால் தற்போது நடப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது வேதனையளிக்கிறது எனத் தெரிவித்த திருமாவளவன், உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு தமிழக முதல்வர் அளித்துள்ள நிவாரணத் தொகை போதாது, அதை உயர்த்தி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.