7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்னையில் காட்டியிருக்கும் அக்கறையை பாராட்டுகிறோம். ஆனால் அதே நேரத்தில் மாநில உரிமையை விட்டுக்கொடுக்காமல் இந்த விடுதலையை சாத்தியப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். 7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. எனவே 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும்வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.