நடிகர் ரஜினிகாந்தின் இலங்கைப் பயணத்தை எதிர்த்ததில் எந்த அரசியல் ஆதாயமும் இல்லை என லைகா நிறுவனத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
சிங்கள ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள் என்ற வடக்கு மாகாணத் தமிழர்களின் அச்சத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே ரஜினிகாந்திற்கு வேண்டுகோள் விடுத்ததாக திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். மற்றபடி, லைகா நிறுவனத்திற்கு எதிராக செயல்பட வேண்டிய தேவை எதுவுமில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயமோ, விளம்பர நாட்டமோ இல்லை என உறுதிபட கூறுவதாகவும் அவ்வாறு லைகா நிறுவனம் நினைத்தால் அது வெறும் கற்பனையே என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.