தமிழ்நாடு

கருணாநிதி பிறந்தநாளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான கைதிகளை விடுதலை செய்க: திருமா கோரிக்கை

கருணாநிதி பிறந்தநாளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான கைதிகளை விடுதலை செய்க: திருமா கோரிக்கை

sharpana

”மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பத்தாண்டுகளுக்கு மேல் சிறைபட்டிருப்பவர்களை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை மறுநாள் ஜூன் 3 மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி “பத்தாண்டுகளுக்கும் மேல் நெடுங்காலமாக சிறைப்பட்டிருப்போர் யாவரையும் மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்ய முன்வர வேண்டும்” என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.