திமுக கூட்டணியில் விசிகவின் நிலையை விமர்சித்த திருமாவளவன், இரண்டாம் இடத்தை பெருமைப்படுவது தகுதியற்றது எனக் கூறினார். கூட்டணியில் சிறிய கட்சிகளின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
திண்டிவனத்தில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் வன்னியரசு, எம் பி ரவிக்குமார், விசிக மாநில பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், சதிகள் சூழ்ச்சிகள் செய்பவர்கள், காழ்ப்புணர்ச்சி செய்பவர்கள் மத்தியில் அரசியல் செய்துவருகிறோம், சூது சூழ்ச்சி வஞ்சகங்களை அறுத்தெறிந்து கொள்கை கோட்பாடுகளில் நேர்மையாக இருந்ததால் அமைச்சரவையில் இடம்பெறுகிற கட்சியாக விசிக உயர்ந்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்தவரை சாதியவாத கட்சிகள் திமுகவின் சொம்பு, கொத்தடிமை என விசிகவை வசைபாடினார்கள்.
இப்போது விசிகவிற்கு அமைந்திருப்பது காலம் போட்ட கணக்கு, கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என விரும்பினோம். அதற்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை, அதுவாகவே தேடி வந்து மடியில் விழுந்தது. விசிக உடான கூட்டணியை திமுக தக்கவைத்து கொள்ளவில்லை அது தான் எங்கள் விமர்சனம். இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றதாக திமுக கூறுகிறார்கள், அப்போது முதல் இடம் பெற வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகள் தேவை அல்லவா. கூட்டணியில் ஒரு மார்க் போட வேண்டும் என்பது குறித்து பேச திமுகவில் ஆள் இல்லை. சிறிய கட்சி பெரிய கட்சி என்பது கணக்கு அல்ல ஆட்சியை கைப்பற்றுவதற்கான வெற்றி. ஆண்ட கட்சி இடண்டாவது இடத்திற்கு வந்ததை பெருமை பேசுகிறார்கள் என்றால், அவர்கள் எந்த உளவியலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது” என பேசியுள்ளார்.