அதிமுகவை காவு கொடுக்கும் வேலையில் பாஜக ஈடுபடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் தாமரை சேற்றில் மட்டும்தான் வளர்வதாகவும் விமர்சித்துள்ளார். அதிமுகவை அழித்து பாஜக - திமுக என இருமுனை அரசியலுக்கு முயற்சி நடக்கிறது என்றும், பாஜகவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதன் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு அதிமுக துரோகம் இழைக்கிறது என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.