திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி pt desk
தமிழ்நாடு

”அரசியலில் பரபரப்பான ஆளுமையாக இருக்க வேண்டும் என ஆளுநர் ஆர்என்.ரவி நினைக்கிறார்” - திருமாவளவன்

அரசியலில் தான் பரபரப்பான ஆளுமையாக இருக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி நினைக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: முருகேசன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது...

சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். முன்கூட்டியே பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். 2024 ஆம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருதை எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது அதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம்.

மரபை மாற்றும் படி ஆளுநர் வற்புறுத்துவது ஏற்புடையதல்ல:

இன்று ஆளுநர் உரை ஆளுநரால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் சொல்லும் காரணம் வியப்பாக உள்ளது. ஆளுநர் பல்வேறு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார். அரசியலில் தான் பரபரப்பான ஆளுமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவு பெறுகிற போது தேசிய கீதமும் இசைப்பதை மரபுப்படி கடைப்பிடித்து வருகிறோம் இந்த மரபை மாற்றும் படி ஆளுநர் வற்புறுத்துவது ஏற்புடையதல்ல.

ஆளுநர் - முதல்வர்

விசிக சார்பில் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம்:

தேசிய கீதத்தை சட்டமன்றத்தில் அவமதிப்பதாக ஆளுநர் அறிவிப்பு செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆளுநரின் இந்தப் போக்கு தமிழ்நாட்டின் சட்டமன்ற மரபை அவமதிக்கும் செயல். விசிக சார்பில் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம். அதிமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் இதனை தங்களின் ஆதாய நோக்கில் கையாளுவது வருத்தம் அளிக்கிறது.

ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது எதிர்க்கட்சி போன்று செயல்பட முடியாது:

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர், தற்போது குண்டர் தடுப்பு காவலில் சிறை படுத்தப்பட்டு இருக்கிறார். புலன் விசாரணையை நடத்துவதற்கு உயர்நீதிமன்றமும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது எதிர்க்கட்சி போன்று செயல்பட முடியாது. தோழமைக் கட்சியாக தான் செயல்பட முடியும்.

ஞானசேகரன்

ஆளுங்கட்சிக்கு சுட்டிக்காட்ட வேண்டிய நிகழ்வை சுட்டிக்காட்டி இருக்கிறோம். கண்டிக்கத்தக்கதை பொது வெளியில் கூட பேசி கண்டித்திருக்கிறோம். கூட்டணியால் எங்கள் கட்சியின் சுதந்திரத்தை இதுவரை தடுக்கவில்லை. ஆளும் கட்சியால் எங்கள் கட்சியின் சுதந்திரம் பாதிக்கப்படவில்லை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.