ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரின் விடுதலை குறித்து பேச மத்திய உள்துறை அமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் மக்களவை எம்பியுமான தொல்.திருமாவளவன் சந்திக்கவுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைதாகி சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். இவர்கள் விடுதலை குறித்து பேச டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்திக்கிறார். அவருடன் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் உடன் சென்று உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.