தமிழ்நாடு

காஷ்மீரை இந்தியா கையாள நேருவின் சாதுர்யமே காரணம் - திருமாவளவன் 

காஷ்மீரை இந்தியா கையாள நேருவின் சாதுர்யமே காரணம் - திருமாவளவன் 

webteam

ஜம்மு - காஷ்மீரை இந்தியா கையாள நேருவின் சாதுர்யமே காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார ரத்து மசோதா மீதான விவாதத்தில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கையே ஜம்மு காஷ்மீரின் நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

வைகோவின் மாநிலங்களவை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, பாஜகவின் கைப்பாவையாக வைகோ செயல்படுவதாக குற்றம்சாட்டினார். வைகோ ஒரு பச்சோந்தி எனவும் அவர் எப்போதும் யாருக்குமே விசுவாசமாக இருந்ததில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய வைகோ, திமுக தயவினால்தான் எம்.பி ஆனதாகவும், ஒரு இனத்தையே அளித்த பாவிகள் காங்கிரஸார் என்றும்  கடுமையாக சாடினார்.

இந்நிலையில், சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் விருது வழங்கும் விழாவில், ஊடகவியலாளர் ஹிந்து ராம் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகள் வழங்கிவிட்டு பேசிய திருமாவளவன், காஷ்மீரை இந்தியா கையாள நேருவின் சாதுர்யமே காரணம் எனவும் ஜம்மு காஷ்மீர் பிரச்னையை 1940 களுக்கே சென்று பேச வேண்டுமெனவும் குறிப்பிட்டார். 370 வது பிரிவின் சிறப்பு அந்தஸ்த்தால் தான், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது எனவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசிட முடியாது எனவும் தெரிவித்தார்.