மதுரை, பொன்மேனி அருகே எஸ்.பி.நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவர் மதுரை மாநகராட்சியின் காசநோய் சிறப்பு பிரிவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது சகோதரரான அந்தோணி பொன்மேனி அருகேயுள்ள விவேக் நகர் பகுதியில் வசித்துவருகிறார்.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி அந்தோணி பொன்மேனி வேளாங்கணிக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அண்ணன் அந்தோணியிடம் பேசிய ஜெயராஜ் வீடுகளில் அதிகளவில் கொள்ளை நடைபெறுவதால் உங்கள் வீட்டை நான் பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, விவேக் நகர் பகுதியில் உள்ள அண்ணன் அந்தோணியின் வீட்டில் தம்பி ஜெயராஜ் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பொன்மேனியில் உள்ள தம்பி ஜெயராஜின் வீட்டின் கதவை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோ லாக்கரை உடைத்து 6பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். அண்ணன் வீட்டிற்குச் சென்ற தம்பி வீட்டில் கொள்ளை நடைபெற்ற அதிர்ச்சியான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.