police station pt desk
தமிழ்நாடு

சென்னை: திருடிவிட்டு 3 வது மாடியில் இருந்து மரத்தின் மேல் குதித்து தப்ப முயன்ற நபர் பலி

சைதாப்பேட்டையில் திருட வந்த இடத்தில் சிக்காமல் இருப்பதற்காக 3 வது மாடியில் இருந்து மரத்தின் மேல் குதித்து தப்ப முயன்ற திருடன் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

webteam

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவர் நேற்றிரவு தனது வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது மணிகண்டன் என்பவர் வீட்டுக்குள் நுழைந்து, மோகன்ராஜின் மொபைல் போனை திருடியுள்ளார்.

manikandan

அப்போது சத்தம் கேட்டு திடீரென விழித்த மோகன்ராஜ், திருடன், திருடன் என கத்திக் கொண்டே மணிகண்டனை துரத்தியுள்ளார். அப்போது செல்போனை தூக்கி எறிந்து விட்டு தப்பிக்க முயன்ற மணிகண்டன், மூன்றாவது மாடியில் இருந்து வீட்டின் அருகில் இருந்த மரத்தின் மீது குதித்துள்ளார். அப்போது மரக் கிளைகள் முறிந்து கீழே விழுந்த்தில் மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், மணிகண்டனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.